கப்டன் செந்தோழன் அவர்கள் ஊர்காவற்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நடேசன் மென்டிஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 நவம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டம் சேமமடுப் பகுதியில் ஜெசிக்குறு நடவடிக்கைப் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.