வீரவேங்கை நவச்செல்லம் அவர்கள் முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தேவராசா விக்னேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் ஜெயசிக்குறு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.