வீரவேங்கை நூதகன் அவர்கள் கரடியனாறு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அப்பாத்துரை ரஜனிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் ஜெயசிக்குறு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.