கப்டன் பாலகிருஸ்ணன் அவர்கள் 3-ஆம் குறிச்சி, ஆலையடி, ஆரையம்பதி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவசம்பு சேகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் ஜெயசிக்குறு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.