மாவீரர் தமிழ்வண்ணன் (வண்ணம்) அவர்கள் கண்டாவளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இராமலிங்கம் ஜீவகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் ராதா வான்காப்பு படையணியின் தாக்குதல் தளபதியாகக் கடமையாற்றினார். 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.