நாட்டுப்பற்றாளர் இந்திரராஜன் அவர்கள் பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஐயாத்துரை இந்திரராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின் பின் யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெற்று வரும்போது 21 ஜூலை 1979 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.