லெப்டினன்ட் நந்தன் அவர்கள் கற்குளம், நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். வீரகத்தி இராஜேந்திரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஜூலை 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.