2-ஆம் லெப்டினன்ட் அருண் அவர்கள் இளமருதங்குளம், சேமமடு, வவுனியாவைச் சேர்ந்தவர். மாயழகு பரமானந்தம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஆகஸ்ட் 1997 அன்று வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் ஜெயசிக்குறு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.