எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.
துயிலுமில்லங்கள் வாரியாக...
மாவீரர்களின் விபரங்கள், அவர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட அல்லது நடுகற்கள் நாட்டப்பட்ட துயிலுமில்லங்களின் அடிப்படையில் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
எமக்குக் கிடைத்த மாவீரர் விபரக்கோவை (1982–2004 வரையிலான விபரங்களைக் கொண்டது), சுமார் 12 ஆயிரம் மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளைக் கொண்டிருந்தது. அத்தரவுகளுடன், ஊடகச் செய்திகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.