வீரவேங்கை புவி அவர்கள் தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தர்மரட்ணம் புவீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 நவம்பர் 1984 அன்று யாழ். மாவட்டம் சுழிபுரப் பகுதியில் சுவரொட்டி ஒட்டப் போகும்போது புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.