வீரவேங்கை சின்னச்சிவா அவர்கள் தொல்புரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தையா சிவானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 நவம்பர் 1984 அன்று யாழ். மாவட்டம் சுழிபுரப் பகுதியில் சுவரொட்டி ஒட்டப் போகும்போது புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.