மாவீரர் முகிலன் (மாஸ்) அவர்கள் நிலாவெளி, திருகோணமலையைச் சேர்ந்தவர். சிங்காரம் சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முறியடிப்புப் பிரிவின் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றினார். 14 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.