மறைமுகக் கரும்புலி கப்டன் கபூர் (நிமலன்) அவர்கள் 15 ஆகஸ்ட் 1996 அன்று யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.