போருதவிப்படை வீரர் சிவகுருநாதன் அவர்கள் இளங்கோ குடியிருப்பு, மூங்கிலாறு, உடையார்கட்டு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை சிவகுருநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஏப்ரல் 2007 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.