போருதவிப்படை வீரர் ஜெயச்சந்திரன் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுந்தரலிங்கம் ஜெயச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 மார்ச் 2007 அன்று வவுனியா மாவட்டம் நவ்விப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.