துணைப்படை வீரர் கப்டன் றட்ணம் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். குஞ்சுபண்டா றணசிங்கா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 அக்டோபர் 1999 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூர் மல்லிகைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.