லெப்டினன்ட் சித்தார்த்தன் அவர்கள் சுண்டிக்குளி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வைத்தியலிங்கம் வசீகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 பிப்ரவரி 1987 அன்று யாழ். மாவட்டம் கைதடிப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.