கரும்புலி மேஜர் டாம்போ அவர்கள் நாச்சிக்குடா சந்தி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். காசிப்பிள்ளை தயாபரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மார்ச் 1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் கரும்புலி மாவீரர் இவராவார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.