மறைமுகக் கரும்புலி லெப்.கேணல் சோழன் அவர்கள் 14 மே 1998 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படை அதிகாரி மேஜர் ஜெனரல் லரி விஜயரட்ண மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.