மறைமுகச் செயற்பாட்டாளர் கப்டன் கஜன் (கபிலன்) அவர்கள் 30 ஜனவரி 1998 அன்று மன்னாரில் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை படையினரின் துப்பாக்கியைப் பறித்து தன்னைத்தானே சுட்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.