போருதவிப்படை வீரர் ஜெயந்திரன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஜோசப் ஜெயந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஜூன் 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.